தமிழ்நாடு

பேனர் இல்லைன்னா என்ன? பலூன் இருக்கே: அதிமுக அப்டேட்

webteam

உயிருடன் உள்ளவர்கள் படத்தை பேனர்களில் பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் கோவையில் ராட்சத பலூனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெற்றுள்ளது.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.195 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றம் அண்மையில் உயிருடன் உள்ளவர்களின் படத்தை பேனர்களில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் நிகழ்ச்சிக்காக   வைக்கப்பட்ட பேனர்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் பழனிச்சாமியின் படத்தை ராட்சத பலூனில் இடம்பெறச் செய்து பறக்கவிட்டுள்ளனர்.