தமிழ்நாடு

கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - சென்னையில் 3 மணி நேரத்தில் 65 மரங்கள் முறிந்து விழுந்தன

கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - சென்னையில் 3 மணி நேரத்தில் 65 மரங்கள் முறிந்து விழுந்தன

JustinDurai

மாண்டஸ் புயல் 2 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் காற்றுடன் பெய்த கனமழையால் 3 மணி நேரத்தில் சுமார் 65 மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாண்டஸ்  புயலால் சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வண்ணாரப்பேட்டை தங்க சாலையில் புதிதாக நிறுவப்பட்ட போக்குவரத்து சிக்னல் காற்றில் சாய்ந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் 12 மணி வரை சராசரியாக 13.13 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் தலா 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.