தமிழ்நாடு

பக்ரீத்: கால்நடைகள் அமோக விற்பனை அதிகரிப்பு

பக்ரீத்: கால்நடைகள் அமோக விற்பனை அதிகரிப்பு

webteam

பக்ரீத் பண்டிகையையொட்டி, இறைச்சிக்காக பலரும் ஆடு, மாடுகளை வாங்கியதால், கிராம சந்தைகளில் வர்த்தக‌ம் அதிகமாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்ற சந்தையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, ஆடுகள், மாடுக‌ள், கோழிகளின் விற்பனை அதிகமிருந்தது. பண்டிகையையொட்டி விலை உயர்ந்திருந்த நிலையில், சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆடு, மாடுகளை வாங்க ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அதேபோல, திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்ததால், விலை வீழ்ச்சியடைந்தது. இவற்றை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த சந்தையில் ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ‌வர்த்தகம் நடைபெற்றது.

இறைச்சிக்காக கால்நடை விற்பனை ஒருபக்கம் அதிகரித்திருந்தாலும், நெல்லையில் கால்நடை இறைச்சி கழிவுகளை பத்திரமாக வெளியேற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இறைச்சி வெட்டுவதால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்த 7 ஆயிரம் பேருக்கு துணிப்பை மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வழங்‌கியுள்ளனர்.