சவுக்கு சங்கர் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் முதல் வீடு தாக்குதல் வரை; கொட்டித் தீர்த்த சவுக்கு சங்கர்.. பின்னணியில் இருப்பது யார்?

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

PT WEB

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னையில் வீடு உள்ளது. இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மைப் பணியாளரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து சவுக்கு சங்கரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.