பாபா பக்ருதீன் புதியதலைமுறை
தமிழ்நாடு

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - ஒருவர் கைது.. காரணம் இதுதான்!

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான ஆவணங்கள் பாபா பக்ருதீனின் வீட்டில் உள்ளதா என தேடி வரும் அதிகாரிகள், அவரது தொலைபேசிகளையும், அதிலுள்ள உரையாடல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

PT WEB

சென்னை, மன்னார்குடி உள்பட 6 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் மன்னார்குடியில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  பாபா பக்ருதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள்  கைது செய்தனர். சென்னையிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தலைமையில் 3 பேர்
கொண்ட என்ஐஏ அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான ஆவணங்கள் பாபா பக்ருதீனின் வீட்டில் உள்ளதா என தேடி வரும் அதிகாரிகள்,
அவரது தொலைபேசிகளையும், அதிலுள்ள உரையாடல்களையும்
கைப்பற்றியுள்ளனர்.

என்ஐஏ சோதனையை முன்னிட்டு காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தின் உறுப்பினர் என்று கருதப்படும் பாபா பக்ருதீன் வீட்டில் , கடந்த 2021 ஆம் ஆண்டு  என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.