விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால்தான் போராட்டத்தைக் கைவிட முடியும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக முதலமைச்சர் பழனிசாமியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இன்று சந்தித்து பேசினர். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, “விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. முக்கியமான கோரிக்கைகளை அய்யாக்கண்ணு வைத்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும்” என்றார்.
முதலமைச்சர் பேசிவிட்டு புறப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால்தான் போராட்டத்தைக் கைவிட முடியும் என உறுதிபடத் தெரிவித்தார்.