முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி, மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்குடன் முகக்கவசங்களை வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மதிச்சியம் செனாய் நகரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுவோருக்கு தாம்பூலத்தட்டில் முகக்கவசத்தை வைத்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.