சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஔவையார் சிலை திறக்கப்பட்டது. சிலையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.