தமிழ்நாடு

கடற்கரை பகுதியில் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்காதீர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோள்

kaleelrahman

மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகள், ஆறு மற்றும் கடற்கரை பகுதிகளில் செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்கும்படி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில், சென்னையின் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை பார்க்க கூடும் மக்கள் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான உயிரிழப்புகளை சுட்டிக் காட்டியுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை, ஆற்றங்கரை, மெரினா கடற்கரை பகுதிகளுக்கு குடும்பத்துடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகள், ஆறு மற்றும் கடற்கரை பகுதிகளில் செல்ஃபி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்கும்படி சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.