முட்டியதில் பலத்த காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. நீயா நானா என காளையும், காளையரும் முட்டி மோதும் இந்தப் போட்டியில் தற்போது வரை 20 மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேரும், பார்வையாளர்கள் 06 என மொத்தம் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

Jallikattu

இந்நிலையில், மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் என்பவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவனியாபுரத்தில் சோகத்;தை ஏற்படுத்தியுள்ளது.