Minister car siege
Minister car siege pt desk
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உள்ளூர் காளை,காளையருக்கு அனுமதி மறுப்பதாக அமைச்சர், ஆட்சியர் கார் முற்றுகை

webteam

செய்தியாளர்: சுபாஷ்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க கடந்த 10ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரம் நடைபெற்றது. இதில், 2400 காளைகளும், 1318 காளையரும் பதிவு செய்தனர். இதையடுத்து காளைகள், வீரர்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக குலுக்கல் முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

Minister Murthy

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இன்று மதியம் டோக்கன் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவனியாபுரத்தில் உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வாகவில்லை எனக்கூறி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆய்வு செய்ய வந்த பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோரின் காரை நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மேயர் ஆகியோர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உள்ளூர் காளைகளும், வீரர்களும் இறக்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.