தமிழ்நாடு

அவலாஞ்சியை தொடர்ந்து மிரட்டும் மழை - நேற்று 45 செ.மீ பதிவு

அவலாஞ்சியை தொடர்ந்து மிரட்டும் மழை - நேற்று 45 செ.மீ பதிவு

rajakannan

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

கடந்த ஒருவரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமான கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவலாஞ்சியில் மழையின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு கடந்த நான்கு மழையானது கொட்டி தீர்த்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேவாலாவில் 16 செ.மீ., நடுவட்டத்தில் 15 செ.மீ., கிளன்மோர்கன், எமரால்ட்டில் தலா 10 செ.மீ, கூடலூரில் 13 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. 

ஏற்கெனவே ஆகஸ்ட் 6ம் தேதி 40 செ.மீ, 7ம் தேதி - 82 செ.மீ, 8ம் தேதி - 91 செ.மீ மழையும் பதிவாகி இருந்தது. 4 நாட்களில் வெளுத்து வாங்கிய மழையால் அவலாஞ்சி மலைப்பகுதியில் மட்டும் 258 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.