தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது..!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது..!

webteam

சென்னை திருமுல்லைவாயலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஷேக் முகமது (28). இவர், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஷேக் முகமது அடிக்கடி அப்பெண் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

(ஷேக் முகமது)

அப்போது அவரது மூத்த மகளான 12 வயது சிறுமிக்கு கடந்த 2017 செப்டம்பர் மாதம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட சிறுமியின் தாய், ஷேக் முகமதுவை கண்டித்துள்ளார். இதனையடுத்து ஷேக் முகமது, அப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அவரை மன்னித்து விட்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று மாலை ஷேக்முகமது மீண்டும் அப்பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், அவரிடம் மகளை திருமணம் செய்து தரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து ஷேக் முகமது, அப்பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனையடுத்து அப்பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஷேக் முகமதுவை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.