TATO  செயலிக்கு எதிர்ப்பு
TATO செயலிக்கு எதிர்ப்பு pt web
தமிழ்நாடு

”OLA, Uber வேண்டாம்.. புதிய செயலியை அரசே உருவாக்க வேண்டும்.." Auto ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

PT WEB

ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. அப்போது ஆட்டோ பயணத்துக்கான செயலியை அரசே உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மேலும் தமிழக அரசு மற்றும் தனியார் இணைந்து உருவாக்கியுள்ள TATO செயலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. OLA, Uber செயலிகளுக்கு மாற்றாக அரசே புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்றும் புதிய செயலியை தனியார் மூலம் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.