பொதுவாக ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிக கட்டணங்கள் வசூலிப்பவர்கள், சாலை விதிகளை மதிக்காதவர்கள் என பலவிதமான கருத்துகள் உண்டு. இந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக கோவை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆர்.எஸ்.புரத்தில், 60 சவரன் தங்க நகைகளுடன் சாலையில் கிடந்த பையை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள். அவர்களைப் பாராட்டிய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், அவர்களுக்கு சன்மானமும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாமல், அதை காவல் ஆணையர் அலுவகத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.