தமிழ்நாடு

பொக்லைன் மணல் கொட்டியதால் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

பொக்லைன் மணல் கொட்டியதால் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

webteam

சென்னை திருவொற்றியூர் ரயில்நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் மூலம் மணல் கொட்டிய போது, அப்பகுதியாக வந்த இளைஞர் மணலில் சிக்கி உயிரிழந்தார்.

ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். திருவொற்றியூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது அந்தப் பகுதியாக வந்த விஜயகுமார் மீது மணல் கொட்டப்பட்டதாக தெரிகிறது. விஜயகுமார் மீது கல் மற்றும் மணல் கொட்டியதால் அவர் மூச்சுதிணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதனை கவனிக்காத பொக்லைன் ஓட்டுநர் மேலும் மண் கொட்ட முயற்சித்த போது, அங்கு கூடியிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து உடனே அங்கு இருந்தவர்கள் விஜயகுமாரை மீட்ட போது அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.