தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தொழிற்போட்டி - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

webteam

சிவகங்கையில் தொழிற்போட்டியின் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

சிவகங்கை அருகே வீரவலசை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜா (எ) காட்டு ராஜா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே சவாரி ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் நின்றுகொண்டிருந்த காட்டு ராஜாவை, ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. 

படுகாயம் அடைந்த காட்டு ராஜா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அரிவாளால் வெட்டி விட்டு தப்பியயோடிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.