தமிழ்நாடு

தமிழகம்: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி தளர்வுகள் இல்லா ஊரடங்கு இன்று !

தமிழகம்: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி தளர்வுகள் இல்லா ஊரடங்கு இன்று !

jagadeesh

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன.

தமிழகத்திலும் கடந்த ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை மாதத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 11-வது முறையாகவும், பிற மாவட்டங்களில் 9-வது முறையாகவும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகளை தவிர, பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.