தமிழ்நாடு

எண்ணிக்கை பிழையால் ஏற்பட்ட 14 கோடி இழப்பு

webteam

இந்திய தணிக்கைத்துறையின் மார்ச் 2017 ம் ஆண்டு வரையிலான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய தணிக்கைத்துறையின் அறிக்கையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பண்டக அதிகாரி 2014-15 ம் ஆண்டில், அவசர தேவைக்கான மருந்தில் ஒரு வருடதேவையை விட நூறுமடங்கு அதிகமாக மாத்திரை தேவை என்று கேட்டுள்ளார். இதை கல்லூரியின் முதல்வரும் அப்போதைய மருத்துவ கல்வி இயக்குனரும் முறையாக சரிபார்க்காமல் ஒப்புகொண்டதன் பெயரில் மருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலவதியானதால் அரசுக்கு 14.25 கோடி இழப்பு ஏற்ப்பட்டதாக கண்டறியப்பட்டது. இவ்வாறு அந்த தணிக்கை அறிக்கையில் குறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி விளக்கம் கேட்கையில் எழுத்துபிழையால் ஏற்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து இதுபோல் தவறு நடைபெறாமல் இருக்கு இனிவரும் ஆண்டுகளுக்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் ஸ்டெம் செல் சிகிச்சை முதற்கட்ட உள் கட்டமைப்பு கட்டிமுடிக்க தாமதம் ஆனது. இதன்காரணமாக அத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த ஒன்பது ஆண்டுகள் தாமதம் ஆனதாகவும், அதனால் 2.70 கோடி வீணாகியுள்ளதாகவும், அரசுக்கு 5.49 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.