கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், நெல்லையிலிருந்து சென்னைக்கு கடைசி பஸ் சேவை காலை 10 மணியுடன் முடிகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வழக்கமான நாள்களில் மதியம் 12.30 மணி முதல் இரவு 10 மணி வரை நெல்லையில் இருந்து சென்னைக்கு பேருந்து போக்குவரத்து வசதி இருக்கும். ஆனால், இனி இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, அதிகாலை காலை 5.30 மணியிலிருந்து காலை 10 மணி வரை மட்டுமே சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
நெடுந்தூரப் பயணமான சென்னையைப்போல் ஆந்திர மாநிலமான திருப்பதிக்கும் நெல்லையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இனி காலை 7:30 மணி வரை மட்டுமே திருப்பதிக்கு பேருந்துகள் நெல்லையில் இருந்து இயக்கப்படும். இதுதொடர்பான நமது செய்தியாளர் நாகராஜன் வழங்கிய ஃபேஸ்புக் நேரலை...