தமிழ்நாடு

இபிஎஸ் உருவபொம்மையை தேனியில் எரிக்க முயற்சி - தடுத்து நிறுத்திய போலீஸ்

நிவேதா ஜெகராஜா

தேனியில் இபிஎஸ் உருவபொம்மை எரிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் காவல்துரையினர் இருந்தததனால், அவர்கள் விரைந்து அதை தடுத்து நிறுத்தி சேதங்களை தவிர்த்தனர்.

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு நடவடிக்கையையும், ஓபிஎஸ் கார் டயர் பஞ்சராக்கியதை கண்டித்தும், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை முன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். இதைக்கண்ட அப்பகுதி காவல்துரையினர், அதை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை பறித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இபிஎஸ் உருவபொம்மையை எரிக்க முயன்ற நபர்கள், காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். இதனால் இந்த நிகழ்வில் யார்மீதும் வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

- செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்