தமிழ்நாடு

3 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி தோல்வி

3 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி தோல்வி

Rasus

நீலகிரி மாவட்டத்தில் 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி, நான்காவது நாளாக தோல்வியில் முடிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் சேரம்பாடி, கொளப்பள்ளி பகுதிகளில் சங்கர் என்ற காட்டு யானை 3 பேரை கொன்றது. கேரள வனப்பகுதிக்குச் சென்றுவிட்ட அந்த யானை, கடந்த வாரம் சேரம்பாடி வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சங்கர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கடந்த 4 நாள்களாக வனத்துறையினர் முயன்று வருகின்றனர். 4 ஆவது நாளான நேற்று, புதுப்பாடி என்ற இடத்தில் அந்தக் காட்டு யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் யானை மரங்கள் அடர்ந்த பகுதியில் ஓடி மறைந்து கொண்டதால், மயக்க ஊசி செலுத்த முடியாமல் போனது. இரவு நேரம் ஆகி விட்டதால், வனத்துறையினர் அதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.