முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அட்டாக் பாண்டி, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாளையங்கோட்டை சிறையிலிருந்த அட்டாக் பாண்டிக்கு, மஞ்சள் காமாலை, நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதையொட்டி, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்ட அவர், அறுவை சிகி்ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.