தமிழ்நாடு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Veeramani

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மே, 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.