வளிமண்டல கீழடுக்கு சுழற்சி முகநூல்
தமிழ்நாடு

நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை..!

விழுப்புரம், கோலியனூர், வளவனூர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

PT WEB

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் 30 நிமிடங்களுக்கும் மேல் கனமழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் திருவண்ணாமலை, பள்ளியம்பட்டு, தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென அரை மணி நேரத்திற்கும் மேல் மிதமான மழை பெய்தது.

விழுப்புரம், கோலியனூர், வளவனூர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கெடிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் , வல்லக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.