காஞ்சிபுரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை பக்தர்கள் வரிசையில் சென்று தரிசித்து செல்கின்றனர்.
33ஆவது நாளான இன்று அத்திவரதர் கரும்பச்சை நிறப் பட்டு உடுத்தி மல்லிகை பூ, சம்பங்கி பூ, செண்பகப் பூ மாலையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் சாலை ஓரங்களில் தங்கியிருந்து அத்திவரதரை விடியற்காலையில் தரிசனம் செய்து செல்கின்றனர்.
நாளை ஆடி பூரம் என்பதனால் அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு, வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பின்னர் மீண்டும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.