சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவது குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று உதவிப் பேராசிரியர் விபின் வலியுறுத்தி உள்ளார்.
உயர் கல்வி நிறுவனமான ஐஐடியில் சாதிய பாகுபாடு நிலவுவதாகக்கூறி அங்கு பணிபுரிந்த விபின் கடந்த மாதம் பதவி விலகினார். பின்னர் தனது முடிவை சில நாட்களில் கைவிட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இதுபோன்ற சூழலில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உதவிப் பேராசிரியர் விபின் அளித்துள்ள புகாரில், Economics & Network Analysis என்னும் பாடத்தை தான் கற்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், ஆனால் வேற்று சமூகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவருக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.