கிருஷ்ணகிரியில் காவல் நிலையத்திற்கு தாமதமாக வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை காவல் ஆய்வாளர் மூக்கில் குத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உதவி காவல் ஆய்வாளர் பதிலுக்கு ஆய்வாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பார்த்திபன். இவர் காவல் நிலையத்திற்கு காலதாமதாக சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் ராம ஆண்டவர், பார்த்திபனை மூக்கில் குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்த்திபன் பதிலுக்கு இராம ஆண்டவரை கன்னத்தில் அறைந்துள்ளார். காவலர்கள் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த தகராறைக் கண்ட மற்ற காவல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்தி நிறுத்தினர். பின்பு தாக்குதலால் காயமடைந்த இருவரும் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.