தமிழ்நாடு

ஆசிய சாம்பியன்ஷிப்: மும்முனை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளி வென்று சாதனை

PT

ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கசகஸ்தானில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் முதல் (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து மொத்தம் 26 வீரர்கள் சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 7 வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க சென்றுள்ளனர். இத்தொடரின் முதல் நாளிலேயே இந்திய அணி 4 பதக்கங்களை வசப்படுத்தியது.

டிரிபிள் ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தொலைவுக்கு தாண்டி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவரான பிரவீன் சித்ரவேல் உள்ளரங்க மும்முறை தாண்டுதலில் புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார். 21 வயதேயான பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தூரம் தாண்டியது மட்டும் இல்லாமல் உள்ளரங்கு தடகள தொடரில் இந்திய வீரர் அமர்ஜீத் சிங் 16.26 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய அளவிலான சாதனையாக இருந்த நிலையில் அதனை முறியடித்து புதிய தேசிய சாதனையை உருவாக்கியுள்ளார். குண்டு வீசுதலில் தஜிந்தர்பால் சிங் தங்கப்பதக்கமும் கரன்வீர் சிங் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். பெண்டாத்லான் போட்டியில் ஸ்வப்னா பர்மன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.