தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று மாலை பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவலைத் தடுக்க இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இன்று செயல்பட அனுமதியில்லை என்பதால் இறைச்சி மற்றும் பொருட்களை வாங்க நேற்று மாலை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னை தி.நகரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் கூடியிருந்தனர். அப்போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிக்க: பையுடன் வந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம் - தமிழக அரசு