fish market
fish market pt desk
தமிழ்நாடு

கன்னியாகுமரி: வரத்து குறைவு, விலை அதிகம் - மீன்களை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்

webteam

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகின்றனர். ஏற்கெனவே கடலில் அடிக்கடி காற்று வீசுவதாலும், கடல் சீற்றம் ஏற்படுவதாலும் குறைந்த அளவிலான பைபர் படகு மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

fish

இன்றும் குறைந்த அளவிலான பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், அவர்களும் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் சாதாரணமாக 1 கிலோ ரூ.300 வரை விலை போகும் ஊளி மீன் ரூ.450-க்கும் ரூ.200 வரை விலை போகும் சிறிய வகை சூரை மீன் ரூ.300-க்கும் விற்பனையாகின.

அதேபோல், ரூ.1,000 முதல் 1,500 வரை விலை போகும் 1 கூடை நெத்திலி மீன் ரூ.3,500 வரைக்கும் விலை போனது. இந்த விலையேற்றத்தால் மீன்களை வாங்கவந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.