தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரும்பத்தகாத சம்பவங்கள் எவையும் நடைபெறா வகையிலும், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கவும் தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தலைநகர் சென்னையில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 77 பேரும், திண்டுக்கல் 53 பேரும், சேலத்தில் 48 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தேனி மாவட்டத்தில் 39, மதுரையில் 34, விருதுநகரில் 31 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் 4 ரவுடிகளும், கரூர் மாவட்டத்தில் 4 ரவுடிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.