தமிழ்நாடு

ஜெ. மரணம்: விசாரணை ஆணைய தலைவராக ஆறுமுகசாமி பொறுப்பேற்பு

ஜெ. மரணம்: விசாரணை ஆணைய தலைவராக ஆறுமுகசாமி பொறுப்பேற்பு

webteam

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர், டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார், அவரது மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆறுமுகசாமி இன்று பொறுப்பேற்றார்.