தமிழ்நாடு

அரசு வழக்கறிஞர்கள் மீது ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு ?

webteam

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையை அரசு வழக்கறிஞர்கள் மேற்கொள்ளவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு 8-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனுவையும், நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனுவையும் அரசு வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் தாக்கல்செய்யவில்லை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.