தமிழ்நாடு

தூத்துக்குடியில் தொடரும் கைது நடவடிக்கை: வீட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்..!

தூத்துக்குடியில் தொடரும் கைது நடவடிக்கை: வீட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்..!

Rasus

தூத்துக்குடியில் போலீசாரின் கைது நடவடிக்கை தொடர்வதால் ஆண்கள் பலரும் வீட்டை விட்டு வெளியூர் செல்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருசிலர் விடுவிக்கவும்பட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை வைத்துக்கொண்டு போலீசார் அங்கு கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களின் வீடுகளை தட்டும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. இதனால் பல வீடுகளில் ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் சென்றுள்ளனர். இதனால் பல கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தோடு மட்டுமில்லாமல் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இதுபோன்ற கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.