உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பும் தமிழக மாணவர்களுக்கு உதவ டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பும் தமிழக மாணவர்களுக்கு உதவ டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் +91-9289516716 என்கிற தொலைபேசி எண் அல்லது email:ukrainetamils@gmail.com என்கிற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.
டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு உதவுவார்கள் என தமிழக முதல்வரின் முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.