தமிழ்நாடு

''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்

''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்

webteam

பேரறிவாளன் விடுதலை வேண்டி அவரின் தாயாரான அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விடுதலைக்காக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. அதேபோல தனது மகனான பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாளும் பல்வேறு விதமாக போராடி வருகிறார். 

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை வேண்டி அவரின் தாயாரான அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ''வயித்தில குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?'' என குறிப்பிட்டுள்ளார். மேலும் #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.