தமிழ்நாடு

காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர் விமான நிலையத்தில் கைது

காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர் விமான நிலையத்தில் கைது

webteam

கன்னியாகுமரியில் காதலியை ரகசிய திருமணம் செய்து பின்னர் கொன்று புதைத்த ராணுவ வீரரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழக கேரள எல்லைப் பகுதியான பூவாறு திருபுறம் பகுதியை சேர்ந்த ராகிமோள். இப்பெண்ணை அகில் என்பவர் 6 வருடங்களாக காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார். பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வேறு திருமணம் செய்ய நினைத்த அவர், காதல் மனைவியை தம்பி ராகுல் மற்றும் நண்பருடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள நண்பரின் காரில் அழைத்துச்  சென்று கொலை செய்துள்ளார். 

அத்துடன் அம்பூரி பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறம் உடலை புதைத்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து மகள் காணாமல் போனது தொடர்பாக பூவாறு காவல்நிலையத்தில் ராகிமோளின் பெற்றார் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் செல்போன் டவர் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து கடந்த 25ஆம் தேதி புதைக்கப்பட்ட உடல் மீட்கப்பட்டது. அத்துடன் கொலைக்கு உதவிய அகிலின் தம்பி ராகுலும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அகில் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரை நெய்யாற்றாங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.