தமிழ்நாடு

வயலில் இறங்கிய ஹெலிகாப்டர்: ஊர் மக்கள் பீதி

வயலில் இறங்கிய ஹெலிகாப்டர்: ஊர் மக்கள் பீதி

webteam

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென வயல்வெளியில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஹெலிகாப்டர் ஆம்பூர் அருகே வந்தபோது ஆயில் கசிவு காரணமாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் குளிதிகை என்ற இடத்தில் பாலாற்றையொட்டியுள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த ராணுவத்தினர் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவிலிருந்து மற்றொரு ஹெலிகாப்டரில் வந்த தொழில்நுட்பக்குழுவினர், ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்பணியில் ஈடுபட்டனர். பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் பெங்களூரூ புறப்பட்டுச் சென்றது.