தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு அணிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது அந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் காவி ஆடை, திருநீறு பூச்சுடன் வள்ளுவரின் படத்தை வெளியிட்டது மற்றும் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவித்தன.
இந்த பிரச்னைகள் சற்றே ஓய்ந்த நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு அணிவித்துள்ளார். தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் காவிதுண்டு அணிவித்து, திருநீறுபூசி, ருத்திராட்ச மாலை அணிவித்து உள்ளார். சிலைக்கு மாலைகள் அணிவித்ததோடு காற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டினார்.