தமிழ்நாடு

"சோழர்காலத்து ஏரிகளை தூர்வாருவதே தலையாய பணி'' - அரியலூர் மதிமுக எம்எல்ஏ வாக்குறுதி!

"சோழர்காலத்து ஏரிகளை தூர்வாருவதே தலையாய பணி'' - அரியலூர் மதிமுக எம்எல்ஏ வாக்குறுதி!

Sinekadhara

சோழர்காலத்து ஏரிகளை தூர்வாரி மக்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அரியலூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மதிமுகவின் சின்னப்பா வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் அரியலூரில் போட்டியிட்டு வென்ற மதிமுக வேட்பாளர் சின்னப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரியலூரில் உள்ள சோழர் காலத்து ஏரிகளை தூர்வாரி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தார். குறிப்பாக கண்டராதித்த ஏரியை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கூறினார்.

இதற்கிடையே, அரியலூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் சின்னப்பா வெற்றி பெற்றதை அடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக எம்எல்ஏ சின்னப்பா காமராஜர் திடலில் இருந்து பேருந்து நிலையம் வரை கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து வந்தார். அப்போது வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.