போலிஸ்
போலிஸ்  NGMPC22 - 147
தமிழ்நாடு

அரியலூர்: சிலை வைக்கும் இடத்தில் டீக்கடையா?..திமுக-அதிமுகவினர் இடையே மோதல்; போலிசார் மண்டை உடைந்தது!

PT WEB

அரியலூரில் திமுக - அதிமுகவினரிடையே‌ நடந்த மோதலில் போலீசார் மண்டை உடைந்தது.

அரியலூர் மாவட்டம்‌ செந்துறையில் அண்ணா சிலை அருகே சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அதிமுக கட்சி அலுவலகமும் அதன் பின்னால் திமுக கட்சி அலுவலகமும் உள்ளது. இரண்டு அலுவலகங்களும் கடந்த 20 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக அலுவலகத்தின் வாசல் ஆக வடக்கு புறம் உள்ள மெயின் ரோட்டை பயன்படுத்தி கொள்ளவும், திமுக அலுவலகம் வாசல் கிழக்கு பார்த்து உள்ளதை பயன்படுத்தி கொள்ளவும் இருவரும் பேசி முடிவெடுத்து அவ்வாறே பயன்படுத்தியும் வந்துள்ளனர்.

இந்நிலையில், திமுக கட்சி பாதையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே கலைஞர் கருணாநிதி சிலையும், அருகே முன்னாள் எம்.பி சிவசுப்ரமணியனுக்கு சிலை வைக்கவும் செந்துறை ஊராட்சி மன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அலுவலகம் பக்கவாட்டில் உள்ள சுற்றுச் சுவரை எடுத்து திமுக அலுவலகம் அருகே டீ கடை வைக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் திமுகவினருக்கு பாதைக்கும் இடையூறு ஏற்படும், சிலை வைக்கவும் இடையூறு ஏற்படும் என்பதால் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்யிடம் நேற்று இது குறித்து கேட்டுள்ளார். “ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசு கொண்டு தான் செயல்படுகிறோம்.

தற்போது டீ கடை‌ இந்த வைக்கலாமா” என அவர் கேட்டுள்ளார். இதனால் அந்த திறக்கப்பட்ட பாதையை அதிமுகவினர் அடைத்துள்ளனர்.

ஆனால், இன்று அதிமுகவினர் பாதையை திறந்து கடைக்கு நிலை வாசல் வைக்கும் பணிக்கு வெல்டிங் வைத்து கொண்டிருந்ததை பார்த்த திமுகவினர் ஏற்பாடு செய்யப்பட்ட வெல்டிங்கை திமுகவினர் உடைத்தனர்.

இதனை கண்டித்து அதிமுகவினர் கடையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அதிமுகவினரை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்பிலும் கல்வீச்சு நடைபெற்றது. அப்பகுதி போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

இதனை தடுக்க முயன்ற டிஎஸ்பி ஓட்டுநர் மண்டை உடைந்தது. மற்றொரு போலீசாருக்கு லேசான காயம்‌ ஏற்ப்பட்டது. இதனால் செந்துறையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.