அனிதா தற்கொலை விவகாரத்தில் தலைமை செயலாளரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் கூறியுள்ளார்.
திருப்பதியில் சாமி தரிசனம் முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முருகன், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் பஞ்சமி நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தாழ்த்தப்பட்டோர் நல பள்ளி, கல்லூரி, விடுதிகளில் சரியான முறையில் உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முருகன் கூறினார்.