அனிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மனித உரிமை ஆணையத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற மத்திய மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்ட தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அனிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மனித உரிமை ஆணையத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
முன்னதாக நடந்த குறைதீர்ப்பு முகாம் நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜூ மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பணியிடமாற்றம், ஊதிய முரண்பாடு, வேலைப்பளு, காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன.