தமிழ்நாடு

அரியலூர்: கார் மரத்தில் மோதி விபத்து - தந்தை மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழப்பு

அரியலூர்: கார் மரத்தில் மோதி விபத்து - தந்தை மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழப்பு

kaleelrahman

புதிதாக கட்டும் வீட்டை பார்க்க சென்றபோது கார் மரத்தில் மோதிய விபத்தில் தந்தை இரண்டு மகள்கள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் வசித்து வந்தவர் ராமலிங்கம். இவர், தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் வெற்றியூர் என்ற கிராமத்தில் புதிதாக வீடுகட்டி வருகின்றார். இதனை காண தனது குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டம் கல்லமேடு கிராமத்தில் இருந்து வெற்றியூருக்கு காரில் சென்றார்.

அப்போது சாத்தமங்களம் சர்க்கரை ஆலை அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. இதில், ராமலிங்கம் மற்றும் அவரது மகள் நாகவள்ளி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமமூர்த்தியின் பெரிய மகள் நாகலெட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓட்டுனர் சங்கர், ராமமூர்த்தியின் மனைவி மற்றும் 3 பேரக்குழந்தைகள் உட்பட 5 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.