செய்தியாளர்: வெ.செந்தில் குமார்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் பாலத்தில் சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தபோது, காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார், கார் யாருடையது? விபத்து நடைபெற்ற உடன் தப்பிச்சென்ற ஓட்டுநர் யார்? என்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.