தமிழ்நாடு

அரியலூர்: ஆடுகளுடன் கொள்ளிடம் ஆற்றில் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்பு

webteam

கொள்ளிடம் ஆற்றின் நடு திட்டில் சுமார் 500 ஆடுகளுடன் சிக்கியிருந்த 3 பேரை 10மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அனைக்குடி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் தனது நண்பர் ஒருவருடன் கொள்ளிடம் ஆற்றில் செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில், தற்பொழுது மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்கள் 370 ஆடு மற்றும் 120 குட்டிகளுடன் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் விக்கிரமங்கலம் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனைக்குடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, அவரது நண்பர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராசு கண்ணன் மற்றும் ஆறுமுகம் என்ற 7 வயது சிறுவன் ஆகியோரை பத்திரமாக படக்கில் மீட்டு அழைத்து வந்தனர். இதையடுத்து கூமார் 500 ஆடுகளை ஆற்றின் திட்டில் பட்டிகட்டி வைத்துள்ளனர்.