தமிழ்நாடு

அறந்தாங்கி: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்

அறந்தாங்கி: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்

kaleelrahman

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி, மருத்துவமனை இருந்தவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு அங்கிருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து தப்பிச் சென்றுள்ளார்.

அறந்தாங்கி எல்என் புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று இரவு கதவு கண்ணாடியை உடைத்துவிட்டு வெளியேவந்த அவர், அங்கு இருந்தவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு தப்பியோடிவிட்டார்.