சடலமாக மீட்கப்பட்ட தம்பதியர் pt desk
தமிழ்நாடு

ஆரணி | வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தம்பதியர் - போலீசார் விசாரணை

ஆரணி அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதியினர் விஷமருந்தி வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சவம்பவம் தொடர்பாக கிராமிய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: மா.மகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேர்ப்பாக்கம் கிராமத்தில் கூலி வேலை செய்து வருபவர்கள் ராஜாராம் (58) - சாமுண்டீஸ்வரி (49) தம்பதியர். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களுடைய வீட்டில் தூங்கச் சென்றனர். இதையடுத்து காலையில் இருவரும் அறையை விட்டு எழுந்து வராததால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அறையை திறந்து பார்த்துள்ளனர்.

Death

அப்போது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிராமிய காவல் நிலைய போலீசார், இருவருடைய பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது கொலையா? தற்கொலை? ஏன்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.