தமிழ்நாடு

வெறும் 68 அடி ஆழத்தில் உள்ள குழந்தையை மீட்க முடியாதா..? இயக்குனர் கோபி நயினார் வேதனை

வெறும் 68 அடி ஆழத்தில் உள்ள குழந்தையை மீட்க முடியாதா..? இயக்குனர் கோபி நயினார் வேதனை

rajakannan

ஆழ்துளை கிணற்றில், குழந்தை விழுந்தால் 10 நிமிடத்தில் மீட்கக்கூடிய அளவுக்குத் தொழில்நுட்பம் தேவை என்று ’அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார். 

திருச்சி மணப்பாறை அருகே, ஆழ்துழை கிணற்றில் குழந்தை விழுந்த சம்பவம் குறித்து ’அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில், “இது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. சாதாரண மக்களின் துயரங்களை போக்குவதற்கான அறிவியல் நம்மிடம் இல்லை. தனிநபரின் சாகசங்கள் மக்களைப் பாதுகாக்காது என்ற இடத்திற்கு நாம் வந்துவிட்டோம். தொழில்நுட்ப கருவிகளாலும் குழந்தையை மீட்க முடியாது எனும்போது கூட்டு முயற்சியால் வெற்றி பெற வேண்டியுள்ளது. முன்னெச்சரிக்கையாக நாம் இருந்திருக்க வேண்டும். பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  

குழந்தை விழுந்தால் 10 நிமிடத்தில் மீட்கக்கூடிய அளவுக்கு அறிவியல் நம்மிடம் இருக்க வேண்டும். ஆழ்கடலில் விழுந்த விமானத்தை தேடும் அளவிற்கு நம்மிடம் தொழில்நுட்பம் உள்ளது. 68 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க வசதி இல்லை என்பது வேதனை. தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பிலும் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப கருவிகள் இல்லை” என்று அவர் கூறினார்.